12. அருள்மிகு ஆரண்யசுந்தரேஸ்வரர் கோயில்
இறைவன் ஆரண்யசுந்தரேஸ்வரர்
இறைவி அகிலாண்ட நாயகி
தீர்த்தம் அமிர்த பொய்கை
தல விருட்சம்  
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் கீழைத்திருக்காட்டுப்பள்ளி, தமிழ்நாடு
வழிகாட்டி திருவெண்காடு கோயில் மேற்கு கோபுர வாசல் வழியாக இளையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் 1 கி.மீ. தூரம் சென்று வலதுபுறம் பிரியும் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். திருவெண்காட்டிலிருந்து மேற்கே 1.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

KeezhaiThirukattupalli Gopuramபிரம்மதேவனிடம் வரம் பெற்ற விருத்திகாசுரன் என்னும் அசுரன் தேவலோகத்தின்மீது போர் தொடுத்தான். கடும்போரின் முடிவில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் விருத்திகாசுரனைக் கொன்றான். அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க, இத்தலத்திற்கு வந்து சிவனைப் பூசித்து மீண்டும் இந்திரப் பதவி பெற்றான் என்று தலவரலாறு கூறுகிறது.

மூலவர் 'ஆரண்ய சுந்தரேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'அகிலாண்ட நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். அழகிய சிறிய திருவுருவம்.

இத்தலத்து விநாயகப் பெருமானை நண்டு வழிபட்டதால் 'கற்கட மகா கணபதி' என்று அழைக்கப்படுகிறார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 11 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 வரையிலும் திறந்திருக்கும். தொடர்புக்கு : இராஜா சுந்தரேச குருக்கள் - 94439 85770.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com